தமிழில் ‘3டி’ தொழில்நுட்பத்தில் ரிலீசாகும் மோகன்லாலின் ‘புலி முருகன்’!

Get real time updates directly on you device, subscribe now.

Pulimurugan

லையாளத்தில் அதிகப் பொருட்செலவில் மோகன்லால் தயாரித்து, நாயகனாக நடித்து ரிலீசான படம் ‘புலி முருகன்’.

சுமார் 150 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்த இப்படம் மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமாக அமைந்தது. அப்பேர்ப்பட்ட இந்த ‘புலி முருகன்’ படம் அதே பெயரில் தமிழில் 3D தொழில்நுட்பத்தில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

மலையாளத்தில் இப்படத்தைத் தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம், ‘புலி முருகன்’ படத்தைத் தமிழிலும் உருவாக்குகிறார்.

வைஷாக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ‘புலி முருகன்’ ஒரு ஆக்ஷடன் மற்றும் அட்வென்சர் படம்.

ஒரு மிருகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவது என்பது சிரமமான காரியம். ஆனால் புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை இந்த படத்திற்கு எடுத்தது மிகப்பெரிய சிரமம். ஏன் என்றால் விலங்குகளுக்கு எப்போது கோபம் வரும் என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி நிறைய சம்பவங்கள் இந்த படத்தில் நடந்துள்ளது. இதில் நடித்த நடிகர்கள் வேலை செய்த தொழில்நுட் கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிரமமப்பட்டனர். அந்த பிரமாண்டத்தை பார்த்த மலையாள ரசிகர்கள் ‘புலி முருகன்’ படத்தைக் கொண்டாடி ரசித்தார்கள்.

Related Posts
1 of 2

இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஆர்.பி.பாலா. கோபி சுந்தர் இசையமைப்பில் சினேகன், ஆர்.பி. பாலா பாடல்களை எழுதியுள்ளனர்.

தேசிய விருதில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட சண்டை இயக்குனருக்கான தேசிய விருதை இந்தப் படத்திற்காக ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பெற்றுள்ளார் என்பது இப்படத்திற்கு சிறப்பு.

இப்படத்தின் நாயகன் மோகன்லாலுக்கும் இந்தப் படத்திற்காகவும் சிறப்பு நடுவர் தேசிய விருது வழங்கப்பட்டது.

இதன் மலையாள 3D படம் சமீபத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. ஒரே காட்சியில் 25000ம் பேர் பார்த்து அது கின்னஸ் சாதனையாக பதிவிடப்பட்டது.

இந்தப் படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.