அடடே ஆச்சரியக்குறி! – இருட்டில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்த சுந்தர்.சி

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவில் பேய்ப்படங்களின் சீஸன் மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை. பேய் என்றாலே பயம் என்பது போய் அதையும் காமெடி ஜானர் ஆக்கி விட்டனர்.

ஆனால் இதுவரை வந்த பேய், திகில், த்ரில்லர் வகையறாவில் சேர்த்தி இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான கதையமைப்பில் படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வி.இசட் துரை.

உச்சரித்தவுடன் பயத்தை உண்டு பண்ணக்கூடிய அளவுக்கு இப்படத்துக்கு ‘இருட்டு’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். திரையில் பார்த்தால் அட இது சுந்தர்.சியா? என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டுப் போய் விடுவார்களாம். அந்தளவுக்கு இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றி அதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்துக் கொண்டு புது தோற்றத்தில் நடித்திருக்கிறாராம். படத்தில் இவருடைய மனைவியாக ஷாக்‌ஷி பர்விந்தர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடிக்கிறார்.

முழுக்க முழுக்க திகில் படமாக இருந்தாலும் படத்தில் காமெடிக்கு யோகிபாபுவும், வி.டி.வி கணேஷும் இருக்கிறார்கள்.

Related Posts
1 of 4

”இது ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் படங்களைப் போல் இருக்காது. அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றித்தான் படங்கள் வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்குவது போலவும் படங்கள் வந்திருக்கும்.

ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் வித்தியாசமான கருத்தோடு வரும். இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும்.

பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பங்கள் அதைவிட பயங்கரமான சம்பங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படம் இருக்கும்” என்கிறார் படத்தின் இயக்குனர் வி.இசட் துரை.

படம் பார்க்கிறவங்க தியேட்டரை விட்டு ஓடாம இருந்தா சரி!