சூர்யாவோட மொத்த சந்தோஷமும் அவரோட வலது கையில இருக்காம்!

Get real time updates directly on you device, subscribe now.

suriya1

ன்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு சூர்யாவிடம் அதிக மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடிகிறது.

திருமணத்துக்குப் பிறகு செலெக்ட் செய்து நடிக்கின்ற படங்களில் கமர்ஷியல் என்கிற வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும் படியான படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திலும் அது மாதிரியான படங்களையே தயாரித்து வருகிறார்.

முதல் தயாரிப்பான 36 வயதினிலே படத்தை பெண்களுக்காக தயாரித்த சூர்யா அடுத்த படமான பசங்க 2 படத்தை குழந்தைகளுக்கான படமாக தயாரித்துள்ளார்.

Related Posts
1 of 50

குடும்பம், குழந்தைகள், பாசம் என ரெகுலர் சினிமா நடிகராக இல்லாமல் ஒரு குடும்பத் தலைவாரக யோசிக்கும் சூர்யா தனது மொத்த சந்தோஷத்தையும் அவருடைய வலது கையில் வைத்திருக்கிறார் என்பது சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கண்கூடாகக் காண முடிந்தது.

ஆமாம், அவர் தனது வலது கையில் ஜோதிகா தியா தேவ் என்ற எழுத்துகளை மெகந்தியில் எழுதி இருந்தார். இது என்னவென்றால் தன் மனைவியின் பெயர் ஆன ஜோதிகா பெயரையும், தன் மகன் மற்றும் மகளின் பெயரையும் மெகந்தி அவர் எழுதி இருந்தார்.

இது அவர் குடும்பத்தின் மீது சூர்யா வைத்து இருந்த அன்பை வெளிப்படுத்துவதோடு, மனக்கஷ்டம் வரும்போதெல்லாம் தனது வலது கையைப் பார்த்து சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வாராம்.