“இப்போது நாம் தான் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்!” : எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொந்தளித்த நட்சத்திரங்கள்!
தனது அமைச்சரையின் பெரும்பான்மையை நிரூபித்து சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதே சமயம் இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் வரலாறு காணாத வகையில் அமளியும் நடைபெற்றது. சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாகவும், சட்டை கிழ்ந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் புகார் தெரிவித்துள்ளார்.
இப்படி இன்று நாள் முழுவதும் களேபரமனா தமிழக சட்டப்பேரவைக்குள் நடந்த சம்பவங்கள் குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஆனது குறித்தும் திரையுலகினர் காட்டமாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதோ அவர்களில் ஒரு சிலரின் கருத்துகளை இங்கே தருகிறோம் :
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ க்களை அவர்களுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்க தயாராகுங்கள் “Rajbhavantamilnadu@gmail.com”ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலாக அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது சட்டப்பேரவை அல்ல. ஆளுநர் வீடு” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
“நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே இப்போது அனைவரின் மனதிலும் உள்ளது. குழந்தைகளும் சட்டசபையில் என்ன நடக்கிறது எனக் கேட்டு, பார்த்து தெரிந்துக்கொள்ளட்டும். இந்த நாட்கள் ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது”. “ஜெயிலில் சசிகலாவுக்கு ஒரு லேப்டாப் கொடுங்கள். 4 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கும்பலுக்கும் 4 ஆண்டுகளுக்குப் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்துங்கள். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது” என்று காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் அரவிந்த்சாமி “என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளுக்கு இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகர் சூர்யா கூட இன்றைய நிகழ்வுகள் குறித்து “இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே…” என்று நக்கல் செய்கிற தொனியில் விரக்தியோடு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
அரசியல் பிழைப்பு வாதிகள் என்றுமே மாற மாட்டார்கள். மக்களாகிய நாம்தான் மாற வேண்டும். நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ளவர்கள் செய்த தவறால்தான் இந்நிலை. நம் குடும்பத்திலுள்ளவர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியை தொடர்ந்து ஏற்படுத்தி, வாக்கு செலுத்த அரசியல் பிழைப்புவாதிகளிடம் பணம் வாங்காமல் பார்த்துக் கொண்டாலே நல்லாட்சி கிடைக்கும்.
இப்படி ஒரு அருவருப்பான அரசியல் நிலை வந்ததால்தான் இன்று ஒவ்வொருவரும் கொதித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் கேவலமான நிலைக்கு செல்ல செல்லத்தான் மக்களுக்கு அரசியல் தெளிவு கிடைக்கும். என்னைப்பொறுத்தவரை நடக்கும் செயலெல்லாம் நல்லதற்கே! தமிழக மக்களிடத்தில் கனன்று கொண்டிருக்கும் அரசியல் தீ எதிர்காலத்தில் நமக்கு நல்ல தலைவர்களை கட்டாயம் பெற்றுத்தரும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.