கவர்ச்சி கவர்ச்சி கவர்ச்சி : இப்படித்தான் வீணாய்ப் போனாராம் டாப்ஸி!
‘காஞ்சனா 2′ ஓடிய ஓட்டத்துக்கு அதில் நாயகியாக நடித்த டாப்ஸி இந்நேரம் குறைந்தது அரை டஜன் படங்களாவது வைத்திருக்க வேண்டும். அதில் ஒன்றிரெண்டாவது ரிலீசாகியிருக்க வேண்டும்.
ஆனால் படம் ரிலீசாகி ஒன்றரை வருடங்களை தாண்டி விட்ட நிலையில் கைவசம் கான் என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தமிழில் வைத்திருக்கிறார்.
தமிழில் மட்டுமில்லை தெலுங்கில் ஒரு படம் ஹிந்தியில் இரண்டு படங்கள் என்ன மற்ற மொழிகளிலும் அவருடைய மார்க்கெட் கலவரமாகித்தான் கிடக்கிறது.
காஞ்சனா 2 வெற்றிக்குப் பிறகு தமிழில் வாய்ப்பு தேட விருப்பமில்லாமல் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்டதாலேயே டாப்ஸியின் மார்க்கெட் சரியக்காரணம் என்கிறார்கள்.
அவரோ என்னை ஒரு கவர்ச்சிப் பொம்மையாக படங்களில் பயன்படுத்த ஆரம்பித்ததால் தான் பட வாய்ப்புகள் அமையாமல் போகக் காரணம் என்று புலம்பியிருக்கிறார்.
எனக்கு நல்லை கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தெரியவில்லை. அதோடு என்னை நடிக்கக் கூப்பிட்ட இயக்குநர்களும் கவர்ச்சியாகத்தான் அவர்களது படங்களில் நடிக்க வைத்தார்கள். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இதே நிலைமை தான் தொடர்ந்தது.
இப்படி கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்ததால் என் மீதான மதிப்பு குறைந்து விட்டது. நல்ல கதைகளுக்குப் பதிலாக கவர்ச்சியாக நடிக்கும்படியான வாய்ப்புகளே வந்தது. அதனால் தான் நான் இப்போது ஹிந்திக்குப் போயிருக்கிறேன். அங்கு எனது நடிப்புத் திறமைக்கு ஏற்ற படங்கள் அமைய ஆரம்பித்திருக்கின்றன. கண்டிப்பாக ஹிந்தியில் நல்ல நடிகை என்று பெயரெடுப்பேன் என்கிறார் டாப்ஸி.
ஆடுகளம் நாயகியையே ஆட்டம் காண வெச்சிட்டீங்களேப்பா…