‘ரெமோ’ வர்றாண்டா… : சொல்லி வெச்சு அள்ளப் போகும் சிவகார்த்திகேயன்!

Get real time updates directly on you device, subscribe now.

remo1

சிவகார்த்திகேயன் பெண் கேரக்டரில் கலக்கியிருக்கும் ரெமோ படத்தை எப்போது ஆரம்பித்தார்கள்? எப்போது படப்பிடிப்பை முடித்தார்கள்? என்பதே தெரியவில்லை.

ஆனால் திடீரென்று சென்ற மாதத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக், மற்றும் டைட்டில் ட்ராக் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாகி நடத்தி அசத்தி விட்டார்கள். படமே பிரம்மாண்டப்படம் தான் என்பதை விழா உணர்த்தியது.

விழாவில் கலந்து கொண்ட பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான இயக்குநர் ஷங்கர் ‘2 பாயிண்ட் o’ படத்தின் ஆடியோ பங்ஷனை எப்படி நடத்தலாம் என்கிற ஐடியா இந்த விழாவுக்கு வந்தபோது எனக்கு கிடைத்திருக்கிறது என்று மேடையில் மகிழ்ச்சி பொங்க சொன்னார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர் டி ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Related Posts
1 of 44

அந்தளவுக்கு சிவகார்த்திகேயன் கேரியரில் பிரம்மாண்டப்படமாக தயாராகி வரும் ரெமோ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்கிற கேள்விக்கு நேற்று இன்ப அதிர்ச்சி தகவல் வெளியானது.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ‘ரெமோ’ ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அக்டோபர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதையும் தாண்டி அதற்கடுத்து சனி, ஞாயிறு மட்டுமில்லாமல் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, மொகரம் பண்டிகை என புதன்கிழமை வரை விடுமுறை நாட்கள் தான். அதை கணக்கில் கொண்டு தான் அந்த நாளை ரிலீஸ் தெதியாக முடிவு செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக எந்தப் புதுப்படத்துக்கும் திட்டமிட்டபடி ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாது சூழல் ஏற்பட்டு வருகிற நிலையில் ரெமோ படத்துக்கான ரிலீஸ் தேதியை மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்திருப்பது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் ஆச்சரியத்தி ஆழ்த்தியிருக்கிறது.