குழந்தைகளை மையமாகக் கொண்ட திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’!

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய சினிமாவில் புதுமையான முயற்சிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக ‘டீன்ஸ்’ எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

மிகவும் வித்தியாசமான முயற்சியாக இந்த திரைப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் வெளியாவது உலகிலேயே இது தான் முதல் முறை, அதுவும் உலகெங்கிலும், தணிக்கை சான்றிதழோடு.இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.