சாதனை படைத்த Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் கடந்த மே 17ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியானது.~

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த “தலைமைச் செயலகம்” சீரிஸ், தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில், முன்னணி நட்சத்திர நடிகர்களான கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Related Posts
1 of 4

ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைப் பரபரப்பாகச் சொல்கிறது இந்த சீரிஸ். நாடெங்கும் தேர்தல் ஜுரம் அடிக்கும் இந்த சூழ்நிலையில், ரசிகர்களுக்கு சரியான தீனியாக வெளியாகியுள்ள இந்த சீரிஸ், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. நடிப்பு, இசை, உருவாக்கம், இயக்கம் எனத் தொழில்நுட்ப ரீதியில் அட்டகாசமான சீரிஸாக விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

“தலைமைச் செயலகம்” சீரிஸ், கடந்த மே 17 ஆம் தேதி வெளியான நிலையில், மிகக் குறுகிய காலத்தில், 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.