சார்மியின் கையில் சிக்கிய அதிர்ச்சிகரமான ‘பென்ட்ரைவ்’!
பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த பெண் அடிமை இல்லை படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு ”தலைப்பு செய்தி” என்று பெயரிட்டுள்ளனர்.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் ஜெகபதிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ”லிங்கா” படத்தில் வில்லனாக நடித்தவர். கதாநாயகியாக சார்மி நடிக்கிறார். மற்றும் சத்யபிரகாஷ், காந்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
எழுதி, இயக்கியிருக்கும் பிரேம்ராஜ் படுஆக்ஷன் படமாக ”தலைப்பு செய்தி” படத்தை உருவாக்கியிருக்கிறார்.
நம்பர் 1 சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது. அதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும்.
அதை கைப்பற்ற நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கும், ஜெகபதிபாபு, சார்மிக்கும் இடையே நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் தலைப்பு செய்தி. படம் விரைவில் திரைக்கு வருகிறது.