‘தலைவெட்டியான் பாளையம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது.‌

இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.