தம்பி-விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 3.5/5

குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் என்பதை தம்பி என்ற டைட்டிலிலே உணர்த்தி விட்டார் இயக்குநர் ஜீத்துஜோசப். பாபநாச வாடை படமெங்கும் தெரிந்தாலும் படத்தின் திரைக்கதை
தெளிந்த நீரோடையாய்ப் பாய்கிறது.

ஜோதிகாவின் தம்பி பருவவயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்ற விரக்தியில் ஜோதிகா திருமணம் முடிக்காமல் இருக்கிறார். அதை எண்ணி அரசியல் பிரபலமான சத்யராஜ் மகளை
எண்ணி கவலை கொள்கிறார் இந்நிலையில் கார்த்தியை கோவாவில் கண்டு பிடிக்கும் சத்யராஜ் இவன் தான் தன் மகன் என அழைத்து வருகிறார். ஆனால் அதில் பெரிய ட்விஸ்ட் வெடிக்க அடுத்தடுத்து பல திருப்பங்களாக விரிகிறது தம்பியின் கதை.

Related Posts
1 of 3

வயதுக்கேற்ற பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார் ஜோதிகா. சத்யராஜின் பரிணாமம் கலந்த நடிப்பு அட போட வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மொத்தப்படத்தையும்
மிக அசால்டாக கார்த்தி தாங்குகிறார். படத்தின் ஆக்‌ஷன் ஏரியா மற்றும் காமெடி ஏரியாவையும் அவரே கவனித்து அதகளப்படுத்தி இருக்கிறார். இளவரசுவின் கேரக்டரும், குட்ட என்ற சிறுவனின் கதாபாத்திரமும் நல்ல வார்ப்பு. ஹீரோயின் வந்துபோகும் வேலையை நொந்துபோகாமல் செய்திருக்கிறார்.

படத்தின் அசாத்தியம் அதன் திரைக்கதை தான். நாம் எந்த வகையில் யோசிப்போம் என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து அதன் பாதையில் இருந்து விலகி பிரம்பிப்பு ஊட்டுகிறது ஸ்கிரீன்ளே.

படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் தம்பிக்கு கம்பீரம் சேர்த்துள்ளன. படத்தின் நீளத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்து இருக்கலாம் இயக்குநரும் எடிட்டரும்.
அன்பு வைப்பதற்கு ரத்த சம்பந்த உறவு தான் வேண்டுமென்பது இல்லை என்றும் அக்கா இன்னொரு அம்மா என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன வகையில் தம்பி பெரும் நம்பிக்கையோடு தியேட்டருக்கு திரும்பவும் அழைக்கிறார்.