நயன்தாரா படத்துக்கு ‘நச்’சென்ற டைட்டில் வைத்த உதவி இயக்குனர்!

Get real time updates directly on you device, subscribe now.

‘டிமாண்டி காலனி’ என்ற வித்தியாசமான திகில் வெற்றிப்படத்தைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தான் இமைக்கா நொடிகள்.

அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராக்‌ஷி கண்ணா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கேமியோ ஃபிலிம்ஸ் சார்பில் சி.ஜே ஜெயகுமார் தயாரித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அஜய் ஞானமுத்து ”படத்தை துவங்கும்போது கதை என்னை திருப்திப்படுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களை தானே எடுத்துக் கொண்டது. நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆர்.டி ராஜசேகர் சாரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.

Related Posts
1 of 43
இமைக்கா நொடிகள் ஆடியோ விழாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, இசையமைப்பாளர் ஆதி

என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம். முதல் படத்தில் அதை செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உதவி இயக்குனர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்து விட்டோம்.

குழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அந்த மாதிரி படங்கள் செய்து விடக்கூடாது என நினைத்தேன், ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது. அதில் மானசி சிறப்பாக நடித்து கொடுத்தார்” என்றார்.

விழாவில் நாயகி ராக்‌ஷி கண்ணா, நடிகர்கள் ரமேஷ் திலக், உதயா, நடிகை ரெபேக்கா, தயாரிப்பாளர்கள் மதன், கதிரேசன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ், , இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மனோஜ்குமார், பிரவீன் காந்தி, ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டன்’ சிவா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.