தண்டட்டி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சின்ன கரு, சிறப்பான உருவாக்கம் என தண்டட்டி நல்ல படமாக வெளிவந்துள்ளது.

நடிகை ரோஹினி வீட்டை விட்டுச் சென்று விட்டதாக போலீஸான பசுபதியிடம் புகார் கொடுக்க வருகிறார்கள் ரோஹினியின் பேரனும் மகள்களும். ரோஹினியை கண்டுபுடித்துத் தர புறப்படும் பசுபதிக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கின்றன. முதல் சம்பவம் ரோஹினியின் மரணம். அதைத் தொடர்ந்து ரோஹினி அணிந்துள்ள தண்டட்டி காணாமல் போவது. காணாமல் போன தண்டட்டிக்கு பதில் கிடைத்தால் தான் ரோஹினி உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற நிலையில் பசுபதி நிலை என்ன? என்பதே மீதிக்கதை

ரோஹினியின் தண்டட்டியில் இருந்தே கதை ட்ராவல் ஆவதால் தண்டட்டியின் முக்கியத்துவம் உணர்ந்தவராக ரோஹினி தாய்ப்பாசம் லெவலுக்கு தண்டட்டிப் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்குப் பின்னால் ஓர் ஆழமான கதையும் இருப்பதால் அவரது நடிப்பில் அப்படியொரு ஆத்மார்த்தம். பசுபதி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு ஷாட்களிலும் உடல்மொழி முகபாவம் என பல்வேறு ரியாக்‌ஷன்களால் கலக்குகிறார். ப்ளாஷ்பேக்கில் கனமான காட்சி ஒன்றில் வரும் அம்மு அபிராமி முதல், ரோஹினியின் பேரன் கேரக்டர், கோளாறு பாட்டி வரை அனைவருமே அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்

சிறந்த இசையை வழங்குவதற்கு அதீதமாக உழைத்துள்ளார் இசை அமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி. பட்டினத்தாரின் பாடல் ஒன்றிற்கு அவர் அமைத்துள்ள இசை வொர்த். மகேஷ் முத்துசாமியின் கேமரா கதையின் ஜீவனை தற்காத்துள்ளது.

படத்தின் முன்பாதியில் வரும் எல்லாக் காட்சிகளும் நீளமாக இருப்பது சிறிய பின்னடைவு. ஒருசில காமெடிகள் சிறப்பாக அமைந்தாலும் பல காட்சிகள் அயர்ச்சியை தருகின்றன. போலீஸ் என்றாலே எகிறும் கிடாரிப்பெட்டி மக்கள் பசுபதிக்கு எதிராக பெரிதாக வினையாற்றவில்லை என்பது லாஜிக் சறுக்கல். இப்படியான மைனஸ் பாயிண்ட்ஸ் இருந்தாலும் படத்தை க்ளைமாக்ஸ் மொத்தமாக காப்பாற்றி விடுகிறது

தண்டட்டி- வில்லேஜ் கொண்டாட்டம்
3/5

#Thandatti #தண்டட்டி