மகனுக்கும் ஜோடி ; அப்பாவுக்கும் ஜோடி: கடுப்பானார் காஜல் அகர்வால்!

Get real time updates directly on you device, subscribe now.

kajal

‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த காஜலை கூப்பிட்டு அஜித்தின் 57வது படத்தில் கமிட் செய்திருக்கிறார் இயக்குநர் சிவா.

இதனால் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு இப்போது உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது. அதை வைத்தே தமிழில் இன்னொரு ரவுண்டு வந்து விடலாம் என்பது தான் காஜலின் கணக்கு வழக்கு.

இதேபோலத்தான் தெலுங்கிலும் காஜலின் மார்க்கெட் ஊசலாட்டம் கண்டிருக்கிற நேரத்தில் சிரஞ்சீவியின் 150-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.

Related Posts
1 of 7

இங்கே அஜித்துடன் நடிக்க ஓ.கே சொன்ன காஜல் அங்கு சிரஞ்சீவிக்கு ஜோடி என்றதும் கடுப்பாகி விட்டாராம்.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. காஜல் அகர்வால் ஏற்கனவே சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவுடன் எவடு, மகதீரா உள்பட ஒரு சில படங்களில் நெருக்கமாக நடித்திருக்கிறார். அப்படி மகனோடு நடித்தவரை இப்போது அப்பாவோடு அதே போல டூயட் காட்சிகளில் ஆடவும் நடிக்கவும் கூப்பிட்டால் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்.

அதையெல்லாம் யோசித்த காஜல் அகர்வால் இப்போது சிரஞ்சீவியின் 150-வது படத்திலிருந்து விலகி விட்டார்.