‘தண்டேல்’- ஒரு காதல் கதை தான் – நாக சைதன்யா!
ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த ‘தண்டேல்’ படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.
இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவி கருணாகரன் ஆடுகளம் நரேன் பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார் தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வழங்குகிறார்.
படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் படத்தைப் பற்றி தனது அனுபவங்களை நாயகன் நாக சைதன்யா பகிர்ந்து கொள்கிறார்.
சென்னையை பற்றி…?
சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலலானது. என் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. சென்னையில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் நிறைய உள்ளது.
இப்படத்தில் நடிக்க தூண்டுதலாக இருந்த விசயம் எது?
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அனைத்து கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் இந்த காதலை நெருக்கமாக உணர்வார்கள்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவன்- எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அண்டை நாடான பாகிஸ்தான் அரசு கைது செய்து மீனவர்களை சிறையில் அடைக்கிறது. அவர்கள் எப்படி சிறையிலிருந்து மீண்டார்கள்? அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் போராட்டம் எப்படி இருந்தது? இந்த உண்மை சம்பவத்தை தழுவி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் ‘தண்டேல்’ திரைப்படம் தமிழக மீனவர்களின் உணர்வையும் பிரதிபலிப்பதால் இந்த திரைப்படம் தமிழகத்திலும் மாபெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏழாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.