ஆடு ஜீவிதம்- விமர்சனம்
பென்யான் எழுதியுள்ள ஆடு ஜீவிதம் நாவலே திரைப்படமாகியுள்ளது.
மனமெங்கும் கனவுகளோடு நாடு கடந்து செல்லும் நாயகனுக்கு நிகழும் அதிர்ச்சிகளே இப்படத்தின் கதை. எழுத்தாக ஈர்த்த கதை விஷுவலாக எப்படியான அனுபவத்தை தந்துள்ளது என கேட்டால்..பதில் பாசிட்டிவாக இல்லை. நிச்சயமாக திரையில் அதிசயம் நிகழவில்லை என்பதே நிஜம்
ஒரு படத்தில் வரும் கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ள இப்படியெல்லாம் உடலை வருத்த முடியுமா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னை வருத்தியுள்ளார் நாயகன் பிரித்விராஜ் சுகுமாரன். மிகச்சிறந்த நடிப்பால் மொத்தைப் படத்தையும் தன் வலுவற்ற தோளில் தாங்கியுள்ளார். திரையை முழுதும் அவரே ஆக்ரமித்துள்ளதால் மற்றவர்களின் நடிப்பு பெரிதாக கவனத்தில் வரவில்லை
தனுஷ் நடித்த மரியான் படத்தில் இதைப் போன்ற சூழலில் ஹீரோ மாட்டிக்கொண்டிருப்பார். அப்போது மிகச்சிறந்த பின்னணி இசையையும் பாடல்களையும் வழங்கியிருப்பார் ஏ.ஆர் ரகுமான். அதைவிட காத்திரமான கதை இப்படத்தில் உள்ளது. ஆனால் ஏ.ஆர் ரகுமான் காத்திரமான இசையை வழங்கத்தவறியுள்ளார். ‘பெரியோனே என் ரகுமானே’ என்ற பாடல் மட்டும் நன்றாக உள்ளது. அப்பாடல் கூட படத்தில் டக் என மறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி உழைத்துள்ளார் ஒளிப்பதிவாளர். ஆர்ட் வொர்க், CG என எல்லா டெக்னிக்கல் ஏரியாவும் படத்தில் பக்கா
ஒரு அழுத்தமான நாவலை கையில் எடுத்த இயக்குநர் அதை அழுத்தமான திரைக்கதையாக்கத் தவறியுள்ளார். படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் என்பது துளியும் இல்லை. படத்தின் கலை நேர்த்தியில் குறையில்லை என்றாலும் படம் மனதோடு ஒன்றவில்லை என்பதால் ஆடு ஜீவிதத்தோடு நம்மால் ஜீவித்திருக்க முடியவில்லை
2.5/5