தி பாரடைஸ் படம் குறித்து  நானி கொடுத்த அப்டேட்!

Get real time updates directly on you device, subscribe now.

 

தி பாரடைஸ் படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து
நடிகர் நானி பேசும் போது: “இரண்டு முறை வெளியீட்டு தேதி மாறியதால் சிறு தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்கள் பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படம் தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது. ஸ்ரீகாந்தின் பிரம்மாண்ட பார்வையைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். கால அவகாசம் குறைவாக இருப்பதால் டிரெய்லர் வெளியிடவில்லை. இது என் திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான, சவாலான படமாக அமைந்தது. சண்டைக் காட்சிகளின் போது எனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன; எங்கள் உழைப்பையும் ரத்தத்தையும் திரையில் காண்பீர்கள்.

டீசரைப் பார்த்துவிட்டு இது வெறும் வன்முறைப் படம் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், ‘தி பாரடைஸ்’ ஒரு அழகான தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டது. பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் நிச்சயமாக வழங்கும்,” என்றார்.