‘காற்றின் மொழி’ படத்துக்காக ”ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜோதிகா!

Get real time updates directly on you device, subscribe now.

சென்ற வருடம் வெளிவந்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டான பாடல் ”ஜிமிக்கி கம்மல்” பாடல்.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்து விட்டது. ஆம், ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்கப் போகிறோம்.

சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Related Posts
1 of 9

நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும் , சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர். ஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த ஏ.ஹெச் காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் மாபெரும் புகழ் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார். இப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18 வெளியீடாக படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.