ஜோதிகா விவகாரம்! மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி
நடிகை ஜோதிகா ஒரு பேட்டியில் தஞ்சை பெரிய கோயிலை, அரசு மருத்துவமனைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய செய்தி பெரும் சர்ச்சையினை கிளப்பியிருக்கும் சமயத்தில் நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்தது போன்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.
அதில் “ஜோதிகாவின் பேச்சுக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். சக நடிகனாக அவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன். சக மனிதனுக்குப் பிரச்சனை என்றால் மனிதன் தான் உதவ வந்தாக வேண்டும். கோயில்கள் அனைத்தும் மருத்துவமனைகளாக மாறும் காலம் வந்துவிட்டது” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்திக்கு விஜய் சேதுபதி தனது சமூகவலைத்தள பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால் நடிகை ஜோதிகா பேச்சு குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.