தேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு
நடிகர் பாக்கியராஜ் சிறு படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர். நேற்று அப்படியொரு விழாவில் கலந்துகொண்டு ஜாலியாகப் பேசினார்.
கிஷோர் சினி ஆர்ட் சார்பில் சிவகாசி முருகேசன் தயாரிக்கும் படம் தேடு. இப்படத்தை சுசி.ஈஸ்வர் எழுதி இயக்கி இருக்கிறார். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் பாக்கியராஜ் சுவாரஸியமாகப் பேசினார். அவர் பேசியதாவது,
“தேடு படத்தின் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் பேரரசு பேசும்போது என் படத்தின் கதாநாயகிகள் எல்லாம் அழகாக இருப்பதாக சொன்னார். நான் கதாநாயகிகளை எல்லாம் காதலிப்பதாகவும் சொன்னார். உண்மை தான். அப்படிக் காதலித்தால் தான் படத்தை சிறப்பாக எடுக்க முடியும். இதில் என்னைவிட என் குருநாதர்( பாரதிராஜா) பிரபலம்” என்றார். மேலும் தேடு திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்!