இயக்குனர், தயாரிப்பாளர் மோதல்! – அப்செட்டான சமந்தா
தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ’96’.
இப்படம் தெலுங்கிலும் பிரேம் குமார் தான் இயக்குகிறார். விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
தமிழில் ’96’ படம் எப்படி தயாரானதோ அப்படியே தெலுங்கிலும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தாவையே தெலுங்குக்கும் தேர்வு செய்தார் பிரேம் குமார்.
இதில் தான் வந்தது மோதல்?
கோவிந்த் வசந்தா வேண்டாம், தெலுங்கில் இருக்கிற பிரபல இசையமைப்பாளர்களில் யாராவது ஒருவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். இதை ஏற்க மறுத்து விட்டார் பிரேம் குமார்.
இதனால், இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்குமிடையே கருத்து வேறுபாறு ஏற்பட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த படத்தின் நாயகன் சர்வானந்த் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று விட்டாராம்.
ஆனால் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும்? இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று மிகவும் ஆவலாக இருந்த சமந்தா தான் இப்போது செம அப்செட்டில் இருக்கிறாராம்.