கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்!
‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய படமொன்றை தயாரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
எமோஷனல், மிஸ்ட்ரி, த்ரில்லர் வகையில் தயாராக உள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.
இப்படத்தில் சமீபத்தில் ‘மகாநடி’ தெலுங்கு படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.