தி க்ரேட் இண்டியன் கிச்சன்- விமர்சனம்
அடுப்பூதும் பெண்களுக்கு அடுத்த வேலை எதற்கு? என்று சொல்லும் ஆணாதிக்கர்களை கேள்வி கேட்கும் படமே தி க்ரேட் இண்டியன் கிச்சன். மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்
படம் துவங்கும் போதே ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் சமையலும் துவங்கிவிடுகிறது. சமயலறை பெண்களுக்கு எத்தகையச் சிறை என்பதை சற்றே மிகைப்படுத்தி பேசியிருக்கிறார் இயக்குநர்
ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தக் கேரக்டரை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். சின்னச் சின்ன ரியாக்ஷன்களிலும் அவரது மெனக்கெடல் தெரிகிறது. சமையல் பாத்திரங்களை கழுவும் போதும், கழுவிய பின் கைகளை முகர்ந்து பார்த்துக் கூசும் போதும், கணவனிடம் சிறு தயக்கத்தோடு தன் பாலியல் விருப்பத்தைப் பேசும்போதும் அட சொல்ல வைக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் கேரக்டர் நன்றாக எழுதப்பட்டுள்ளது. போலவே மாமனார் கேரக்டரில் வருபவரும் அதகளம்
பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே பெரிய அதிர்வை தரவில்லை. ஒளிப்பதிவு ஓரளவு ஓகே ரகம்
மலையாளம் ஒரிஜினலில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் அட்டகாசமாக நம்மோடு கனெக்ட் ஆகும். தமிழில் ஏனோ அந்த க்ரிப் கூடி வரவில்லை. பட்ஜெட்டில் கவனம் செலுத்திய இயக்குநர் காட்சிகளின் வழியாக உணர்வுகளை கடத்துவதிலும் கவனம் செலுத்தியிருந்ந்தால் இந்தக் கிச்சனில் சுவை கூடியிருக்கும்
2.5/5