உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்!

Get real time updates directly on you device, subscribe now.

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான, சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.