போடுறா பாட்டை… : தேர்தலில் மிரட்டும் விஷால் அணி!

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

டிகர் சங்கத் தேர்தலைப் போலவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் தர லோக்கலாக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’யினர்.

ஒரு பக்கம் பல கோடிகளில் படமெடுக்கிற தயாரிப்பாளர் முதல், சில கோடிகளைப் போடுகிற தயாரிப்பாளர் வரை யாராக இருந்தாலும் அவர்கள் வீடு தேடிச்சென்று ஓட்டுக் கேட்கும் விஷால் இன்னொரு பக்கம் தனது அணியினர் மூலமாக என்னென்ன வழிகளில் அணியை பிரபலப்படுத்த முடியுமோ? அந்தந்த வழிகள் அத்தனையும் கையாள ஆரம்பித்திருக்கிறார்.

அதன் ஒன்றாகத்தான் தான் சார்ந்த அணியை எதிர்த்து நிற்கும் அத்தனை அணியினரையும் மிரள வைக்கும் விதமான தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிரச்சாரப் பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

விஷால் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிம் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் தான் இந்தப் பாடலை தயார் செய்திருக்கிறார்.

Related Posts
1 of 69

”எழுந்து வா நீ இழந்தது போதும் உரிமையைக் காப்போம்” என்கிற சூட்டைக் கிளப்புகிற வரிகளை கே.ஆர்.தரண் எழுத அரவிந்த் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ பாடல் கோடம்பாக்கத்தின் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் செம வைரல்!

அந்த வைரல் வீடியோவை நீங்களும் பார்த்து ரசிக்க கீழே இருக்கும் வீடியோ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!