விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : தமிழ்ப்புத்தாண்டில் ‘தெறி’ ரிலீஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ன்னடா இது விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை? என்று தான் பரிதாபப்பட வேண்டியிருக்குமோ என்று தான் நினைத்தோம் கசிந்த தகவலை கேள்விப்பட்ட போது!

இப்படி ஒரு டீஸர் தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே சாதனை படைத்ததில்லை என்று சொல்கின்ற அளவுக்கு விஜய்யின் ‘தெறி’ பட ரீஸர் ட்விட்டரில் மிகப்பெரிய சாதனையை படைத்து விட்டது.

படம் மீதான அதிகபட்ச எதிர்பார்ப்பே டீஸர் ரசிகர்கள் மத்தியில் இந்தளவுக்கு வரவேற்பைப் பெற காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.

Related Posts
1 of 79

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் தொன்னூறு சதவீதம் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோவை எப்போது தெறிக்க விடுவார்கள் என்பது தான் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் தெறி பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு புது இசை அனுபவத்தை தரும் என்று சஸ்பென்ஸ் வைத்திருந்த நிலையில் வருகிற மார்ச் 20-ம் தேதி ஆடியோ பங்ஷன் சென்னையில் நடைபெறும் என்று புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் அனேகமாக எலெக்‌ஷன் ரிசல்ட் வந்த பிறகு தான் படம் ரிலீசாகும் என்றொரு தகவலும் உலவிய நிலையில் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதானே எலெக்‌ஷனுக்கும், தெறி கலெக்‌ஷனுக்கும் என்ன சம்பந்தம்?