புதுசா படமே இல்லையாம்ங்க… : ஓரங்கட்டப்படுகிறாரா அனிருத்?
ஏன் தான் சிம்புவுடன் கூட்டணி வைத்தோமோ என்று புலம்புகிற அளவுக்கு பீப் சாங் விவகாரத்தில் நொந்து விட்டார் இசையமைப்பாளர் அனிருத்.
சில மாதங்களுக்கு முன்பு வரை பெரும் சர்ச்சையை கிளப்பிய பீப் சாங் பாடலில் சிம்புவுடன் சேர்ந்து அனிருத்தின் பெயரும் கிழிந்து தொங்கியது.
தமிழகம் முழுவதும் இருவர் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பாய, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்து விட்டார் அனிருத்.
ஆனாலும் அவர் மீதான கெட்ட இமேஜ் மாறாததால் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலரும் அனிருத்தை தங்கள் படங்களிலிந்து கழற்றி விட்டு விட்டனர்.
இருந்தாலும் கைவசம் சிவகார்த்திகேயனின் ரொமோ, அஜித்தின் 57வது படம், ரம் என ஒரு சில படங்களை வைத்திருக்கும் அவருக்கு புதிதாக பட வாய்ப்புகள் தேடி வருவது வெகுவாக குறைந்து விட்டதாம்.
எல்லோரும் சந்தோஷ் நாராயணன், ஜி.வி.பிரகாஷ்குமார் என சக இசையமைப்பாளர்களை தேடிப்போக ஆரம்பித்திருப்பதால் நொந்து போயிருக்கும் அனிருத் ஆல்பம் வெளியிடுவது, வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவது என தனது ரூட்டை மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.