சரத்குமார் நடிக்கும் “தி ஸ்மைல் மேன்” !

Get real time updates directly on you device, subscribe now.

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகிறது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man).தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வெகு சில நடிகர்களில் ஒருவரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திரைவாழ்வில், சாதனை படைப்பாக பிரமாண்ட பட்ஜெட்டில், அவரது 150 வது படமாக இப்படம் உருவாகிறது.  

Related Posts
1 of 4

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது.