நதியா நடிச்சிருக்கிற படத்துல ஆபாசமா? : வதந்தியால் வேதனைக்குள்ளான இயக்குநர்

Get real time updates directly on you device, subscribe now.

thiraikku-varaadha-kadhai-2

லையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்கள் அத்தனை பேரையும் இயக்கியிருப்பவர் துளசிதாஸ்.
அது மட்டுமா? சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய அவர் கேரள அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கி தமிழில் இந்த தீபாவளிக்கு ரிலீசாகப் போகும் படம் தான் ‘திரைக்கு வராத கதை’. நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் இப்படம் பெண்களே பார்க்க முடியாத லெவலுக்கு ஆபாசமாக இருப்பதாக வந்த செய்தியில் ரொம்பவே அப்செட்டாகி விட்டார் துளசிதாஸ்.

எனக்கும் குடும்பம் இருக்கிறது. என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். நான் ஒரு படத்தை எடுத்தால் அதை பெண்களும் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் எடுப்பேன்.

Related Posts
1 of 4

என்று விளக்கம் கொடுக்கக் காரணம்? இனியாவும் நதியாவும் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருப்பதை போலவும், அவர்களுக்குள் தகாத உறவு இருப்பதை போலவும் திரைக்கு வராத கதை படத்தில் காட்சிகள் இருப்பதாக செய்திகள் பரவி விட்டது. கூடவே படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அந்த காட்சிகளை வெட்டி வீசி விட்டதாகவும் செய்திகள் வந்ததால் வேதனைப்பட்டார் துளசி தாஸ். இந்தப் படத்தில் லெஸ்பியன் மாதிரியான எந்தக் காட்சியும் இல்லை. ஒரு பெண் மீது இன்னொரு பெண்ணுக்கு அன்பு வரலாம். அந்த அன்பை நான் எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறேன் என்பதை நீங்கள் திரையில் பார்த்து விட்டுச் சொல்லுங்கள். அந்த வகையில் இந்தப் படத்தை குடும்பத்தோடு எல்லோரும் பார்த்து ரசிக்கலாம்.

நதியா நடிக்கிற படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்குமா? என்று துளசிதாஸ் கேட்கிற கேள்வியிலேயே உண்மை வெளிவந்து விட்டது.

‘எம்.ஜே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு கிட்டத்தட்ட 140 தியேட்டர்களில் ரிலீசாகிறது.