திரையிலும் களமாடும் சீமான்

Get real time updates directly on you device, subscribe now.

சீமான் பொது வெளியில் களமாடுவதைப் போல திரையிலும் தற்போது களமாடத் துவங்கி விட்டார். வரும் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள மிக மிக அவசரம் படத்தில் ஒரு நல்ல கேரக்டர் பண்ணிருக்கும் சீமான் தற்போது தவம் என்ற விவசாயம் சம்பந்தப்பட்ட படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இப்படம் பற்றி படக்குழுவினர் கூறும்போது,

“விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது தவம் படம். முழுக்க முழுக்க கதையை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் பெருமையையும் உணர்த்தும் படம் இது. எல்லோரும் மறந்த ஒரு காதலை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம் அது நிச்சயம் பெரிய வரவேற்பை பெரும்.

படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் அனைத்து கதாபாத்திரமும் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கிறது. முக்கியமாக கதாநாயகன் வசி புது முக நடிகர் போல் தெரியவில்லை அந்த பாத்திரமாகவே மாறி இருந்தார் என்று வெகுவாக பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் இது என்று கூறினார்கள்” என்றனர்

இந்த படத்தை நிறைய முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்த்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று நவம்பர் 8 ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.