ரஜினியின் புதிய படத்திலும் சிவாவின் செண்டிமெண்ட் டைட்டிலா?
வி தலைப்பு தான் சிறுத்தை சிவாவிற்கு செண்டிமெண்ட். அதனால் தனது அடுத்தப்படத்திற்கும் அந்தப்பெயரில் துவங்கும் டைட்டில் தான் இருக்கும் என்கிறார்கள். இது அடிஷ்னல் மேட்டர். மெயின் மேட்டர் கீழே இருக்கு
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதுஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் தமிழில் தல அஜீத்குமாரைக் கொண்டு, ‘வீரம்’ ‘வேதாளம்’ ‘விவேகம்’ ‘விசுவாசம்’ ஆகியப் படங்களை இயக்கியிருக்கும் சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டாருடன் இணையும் படத்திற்கும் அதே ‘வி’ என்கின்ற எழுத்தைக் கொண்டு ஒரு தலைப்பை உருவாக்கியிருப்பதாகவும், அதுவே படத்தின் தலைப்பாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.