திருக்குறள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

Get real time updates directly on you device, subscribe now.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகிருஷ்ணன் பேசியதாவது..

அனைவருக்கும் வணக்கம், குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட இயக்க போராளி. இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைததார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம். இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம். அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐபி விஸ்வநாதன் ஐயா வந்து ரொம்ப சிக்கனமான மனிதர் அவர் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். கலைச்சோழன் நான் பேச வேண்டியதை பேசி விட்டார்: நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.