யார் பார்த்த வேலைடா இது? : கசிந்தது ‘பைரவா’வின் முக்கியமான சீக்ரெட்!
மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றாலே கடுகு சைஸ் சமாச்சாரம் கூட ரசிகர்களுக்கு வைரல் ரேஞ்சு தான்.
அதிலும் விஜய் மாதிரியான கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஹீரோ சம்பந்தப்பட்ட பட சீக்ரெட்டுகள் அவ்வப்போது கசிவது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் அப்பட நிறுவனத்துக்கு அது பெரும் தலைவலி.
‘பைரவா’ படத்தைப் பொருத்தவரை படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கில் ஆரம்பித்து ‘ட்ரெய்லர்’ வரை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே அது சம்பந்தமான விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் லீக்காகி விடுகின்றன.
அப்படித்தான் வருகிற 12-ம் தேதி பொங்கல் வெளியீடாக வர இருக்கும் ‘பைரவா’ படத்தின் முக்கியமான சீக்ரெட்டான அப்படத்தின் கதைச்சுருக்கமும் இப்போது சமூகவலைத் தளங்களில் கசிந்திருக்கிறது.
ஒரு ஊழல் பெருச்சாளிக்கு எதிராக ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் போராட, அந்த போராட்டத்தை தன் கையில் எடுத்து தொடர்ந்து போராடுகிறாராம் விஜய்? யார் அந்த ஊழல் பெருச்சாளி? அவர் செய்த ஊழல் என்ன? அவரை எதிர்க்கும் விஜய்க்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே ‘பைரவா’வின் தெறிக்க வைக்கின்ற கிளைமாக்ஸாம்.
படு சீக்ரெட்டாக வைத்திருந்த இந்தக் கதைச்சுருக்கம் யார் மூலமாக எப்படி லீக்கானது என்கிற குழப்பத்தில் இருக்கிறது ‘பைரவா’ படக்குழு.
எப்படியிருந்தாலும் விஜய் என்ற மாஸ் ஹீரோவுக்கு இன்னொரு ஹிட் உறுதி என்று மட்டும் நம்புகிறார்கள் இந்தக் கதைச்சுருக்கத்தைப் படித்த கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள்.
அப்படிப்போடு!
ஆடியோ வடிவில் கேட்க இங்கே கிளிக் செய்யவும் >>> :