இந்தக் காதல் என்னாகுமோ? : கவலையில் நயன்தாரா

Get real time updates directly on you device, subscribe now.

nayan1

திரைப்படங்களில் போல்ட்டான கேரக்டர்கள் அமைகிற அளவுக்கு நயன்தாராவின் நிஜ வாழ்க்கை போல்ட்டாக அமைந்ததில்லை. காதல் என்று அருகே வந்து உருகி வழிந்த ரெண்டு பேரும் புஷ்பா புருஷன்களாக மாறிப் போனது தான் மிச்சம்.

இந்தக் காதல் கதைகளால் இடையில் கொஞ்சம் நயனின் மார்க்கெட் ஆட்டம் கண்டாலும் கமிட் செய்த அடுத்தடுத்த படங்கள் எல்லாமே அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன.

அவர் சோலோவாக நடித்த ‘மாயா’வோ அவரது இமேஜை கூடுதலாக ஒருபடி தூக்கி வைப்பதாகவே அமைந்தது. அந்தளவுக்கு இன்றைக்கும் நயனின் மார்க்கெட் ஸ்டெடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் படத்தில் நயன் தான் ஜோடியாக வேண்டும் என்று விரும்பிக் கூப்பிடுகிற அளவுக்கு ஹீரோக்களின் பேவரைட் நடிகையாகி இருக்கிறார்.

இதற்கிடையே இரண்டு காதல் தோல்விகளால் தாணுண்டு, தன் நடிப்புண்டு என்றிருந்த நயனின் வாழ்க்கையில் இன்பப் புயலாக வந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரெளடி தான்’ படப்பிடிப்பில் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி செய்த ரொமான்ஸ் எபிசோட்டையே தனி படமாக எடுக்கலாம். அந்தளவுக்கு இருவரும் காதலில் கட்டுண்டார்கள்.

Related Posts
1 of 41

ஆனால் ஒன்று!

முந்தைய இரு காதல் போல இல்லாமல் இன்றுவரை இந்த ஜோடியின் காதல் இனிதே சென்று கொண்டிருக்கிறது. அவ்வளவு ஏன் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு கூட விக்னேஷ் சிவனை கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து கொடுத்தார் நயன்தாரா என்றெல்லாம் செய்தி வெளியானது.

இந்தக் காதல் விவகாரம் கோலிவுட், டோலிவுட் என திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டாலும் நயனைத் தேடி வரும் வாய்ப்புகள் குறையவில்லை. இன்றைக்கும் அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் நயன்தாரா. அதேசமயம் அவரை இன்னொரு கவலையும் ஆட்கொண்டிருக்கிறது.

எந்த வித மனக்கசப்பும் இல்லாமல் ஸ்மூத்தாக சென்று கொண்டிருக்கிறது  இந்தக் காதல். ஒருவேளை இதையும் மாசக்கணக்கில் இழுத்துக் கொண்டிருந்தால் எங்கே வெறுப்பில் விக்னேஷ் சிவன் குட்பை சொல்லி விடுவாரோ? நம் காதல் புட்டுக் கொள்ளுமோ? என்கிற கவலை தான் அது.

எதுக்கும் திருமணத்தை சீக்கிரமே வெச்சிருங்க நயன்!