யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’!

Get real time updates directly on you device, subscribe now.

மிகச் சில நகைச்சுவை நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது அவர் கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

Related Posts
1 of 8

அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் ‘PRE’ (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

#Thookudurai