‘சுமோ’வில் புது அவதாரம் எடுத்த மிர்ச்சி சிவா!

Get real time updates directly on you device, subscribe now.

ஹீரோவாக நடித்தாலும் காமெடியில் தனக்கென ஒரு தனி பாணி வைத்து கலக்கி வருபவர் ‘மிர்ச்சி’ சிவா.

சில மாதங்களாக எந்தப்படமும் அவருடைய நடிப்பில் வராமல் இருந்தது. இந்த நிலையில் அவர் சைலண்ட்டாக நடித்து வந்த ‘சுமோ’ என்ற திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

Related Posts
1 of 136

இந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் பாடல் காட்சிகள் மற்றும் படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் அங்கேயே படப்பிடிப்பு நடத்தி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக படம் தயாராகியிருக்கிறது.

இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம் போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்திலும் ரசிகர்களை கவரும் விதமாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது .