The Greatest of all time- (தி கோட்) விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

VP- தளபதி கூட்டணி சறுக்கியதா? சாதித்ததா?

விஜய் இருக்கிறார். அதுவும் இருவராக! பிறகு எதற்கு கதை? விஜய்யை வைத்து படமெடுப்பவர்கள் அப்படி யோசிப்பது இயல்பு தான். அதையே தான் வெங்கட் பிரபுவும் ஃபாலோ செய்து, ஒரு பழைய கதையை கையில் எடுத்துள்ளார். ஆனால் அதை ரசிகனுக்கு கொண்டு சேர்த்த விதத்தில் அசத்திவிட்டார். சாதாரணமாக பழி வாங்கும் கதையில், குட்டி குட்டி எமோஷ்னல்,ப்ளாஸ்ட் ஆகும் காமெடி, வேறலெவல் ஆக்சன் என கலந்துகட்டி, தமிழக வெற்றுக்கழக மாநாட்டிற்கு பெரிய பல்ஸை ஏற்றிவிட்டுட்டார்.

சிறுவனாக இருந்த மகனை ஒரு விபத்தில் பறிகொடுத்து விடுகிறார் தந்தை விஜய். அவர் முன் இறந்து போனதாக நினைத்த மகன் விஜய் இளைஞனாக வந்து நிற்கிறார். வந்தவர் மகனாக வராமல், மகா கெட்டவனாக வந்தால்? இதுதான் படத்தின் சின்ன ஒன்லைன்.

Related Posts
1 of 2

நடிப்பில் விஜய் அசூரப் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். நெகட்டிவ் ரோலில் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் சொதப்பியதை இந்தப்படத்தில் சரி செய்துள்ளார். வில்லனாக விஜயை பார்க்கவே அத்தனை சர்ப்ரைசாக இருக்கிறது. இரண்டு கேரக்டரிலும் சிறப்பாக நடித்துள்ளார். பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் மூவரும் வலுவான கேரக்டரில் நடித்துள்ளனர். அஜ்மல், லைலா ஆகியோருக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. சினேகா அழகாக வசிகரிக்கிறார். மோகன் கேரக்டர் இன்னும் பெட்டராக எழுதப்பட்டிருக்கலாம்

படம் தொழில்நுட்ப ரீதியாக பலபடி முன்னேறியுள்ளது. ‘டிஏஜிங் மற்றும் ஏஐ’ தொழில்நுட்பத்தில் இளமையான விஜய்யை சிறப்பாக ரசிக்க முடிகிறது. படத்தின் விஷுவல் படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. யுவனின் இசையில் பாடல்களை விஷுவலாகப் பார்க்கும் போது, சிறப்பாகவே இருக்கிறது. பின்னணி இசை நல்ல மாஸ் ஆக அமைந்துள்ளது.

முன்பாதி படம் சற்று நீளமாக இருப்பது ஒரு மைனஸ். வில்லன் கேரக்டரில் ஆழமில்லாதது அடுத்த மைனஸ். ஹீரோ கேரக்டர் செய்யும் தொழிலில் தெளிவில்லாததும் ஒரு மைனஸ் தான். ஆனால் இந்த மைனஸ்களை எல்லாம் இரண்டாம் பாதி ப்ளஸ் ஆக்கிவிடுகிறது. அதனாலே ‘Goat.. sure shot’ கேட்டகிரியில் வந்துவிடுகிறது.

3.25/5