குழந்தைகளை பயமுறுத்த வரும் டாடி ஜான் விஜய்!

Get real time updates directly on you device, subscribe now.

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் புதிய திரைப்படம் தூநேரி. இப்படத்தை சுனில் டிக்சன் இயக்கி இருக்கிறார். இவர் கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான், தெனாலி, ரஜினி நடிப்பில் வெளியான பாபா,குசேலன், உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

குழந்தைகளை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் ஜான் விஜய்யின் கதாபாத்திரம் குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு உருவாக்கப் பட்டிருக்கிறது என்று இயக்குனர் சுனில் டிக்சன் தெரிவித்துள்ளார்.