அக்-16ல் வெளியாகும்’டைகர்’ படத்தின் டிரைலர்!
சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இரும்புச்சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித்தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான்கானின் தோற்றத்தில் இப்படத்தின் டிரைலர் பிற்பகல் 12 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் யதார்த்தாமான ராவான ஆனால் கண்கவரும் விதமாக இருக்கும் என கூறுகிறார் சல்மான்கான். இந்த புதிய தோற்றம் டிரைலரிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். டைகர் தன்னுடைய விரோதிகளை அழிப்பதற்காக முரட்டு சக்தியுடன் வேட்டையில் இறங்குவார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரில்லரான டைகர்-3 தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது.
மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர்-3’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புடன் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 100 சதவீத பிளாக்பஸ்டர் ரிசல்ட்டை வழங்கிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை ஆதித்யா சோப்ரா எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான அடுத்த அத்தியாயத்தை இந்தப் படம் வெளிப்படுத்த உள்ளது. இதுவரை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் வரிசையில் இப்போது டைகர் 3 இணைந்திருக்கிறது..