சல்மான் கான் திரை வாழ்க்கையை பிரகாசமாக்கிய “டைகர்-3”!
ஹிந்தி சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான், டைகர்-3-படத்தின் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்! ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்ததோடு நின்று விடாமல் ஹிந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
சல்மான் கூறும்போது, “மூன்று டைகர் படங்கள், மூன்று வெற்றிக் கதைகள். டைகர் படவரிசையின் 3 பாகங்களும் என் இதயத்தில் ஆழப் பதிந்து இருக்கிறது, மேலும் அது மக்களின் மனங்களிலும் அதற்கான இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.டைகர் படவரிசையானது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்றாகும், மேலும் நிச்சயமாக இது ஒரு பாரம்பரிய பிராண்டாகும், இது எனது திரைவாழ்க்கையில் எப்போதும் வெளிச்சமாக பிரகாசித்துக் கொண்டே இருக்கும்” என்றார்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவான டைகர்-3 இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.