டாக்ஸிக்- விமர்சனம்
வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ள ஒரு படம்
ஹீரோ யாஷ் மரணத்திற்கு பயப்படாத ஒரு டாக்ஸிக். அதற்கான காரணம் அவர் வாழ்வில் எதிர்கொண்ட டார்க் பக்கங்கள். சிறுவயதில் தன் அம்மா அப்பாவை இழந்து அக்கா நயன்தாரா பராமரிப்பில் வளர்பவர் யாஷ். அக்காவிற்கு தம்பியை கோவாவை ஆள வைக்கவேண்டும் என்ற ஆசை. ஆல்ரெடி கோவாவை ஆளும் ஒருவரிடம் இருவரும் பல கொலைச்சம்பவங்கள் செய்யும் வேலையைச் செய்கிறார்கள். ஒருநாள் அந்த கோவா டானையே எதிர்த்து நிற்கும் சூழ்நிலை அவர்களுக்கு வருகிறது. அதன்பின் கதை முடிவை எட்ட 20 வருடங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. யெஸ் 1947 முதல் 1967 வரை நடக்கும் கதை இது
நடிகராக நம் மனதை தனது அயாராத உழைப்பால் கவர்கிறார் நடிகர் யாஷ்! சண்டைக்காட்சிகளில் அபாரம். இப்படியொரு அக்கா இருந்தா உலகத்தையே ஆளலாம் என்று சொல்வது போல் நயன்தாரா அசத்தியுள்ளார். கவர்ச்சி மற்றும் நடிப்பு இரண்டிலுமே பாஸ்மார்க் வாங்குகிறார் கியாரா அத்வானி. ருக்மணி வசந்த் கேரக்டர் பெரிதாக எடுபடவில்லை.தாரா சுதாரியா, ஹுமா குரேஷி ஆகியோர் ஒகே

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷிக் பாக்சி என படத்தில் மூன்று இசையமைப்பாளர். இருந்தும் இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ராஜீவ்ரவியின் ஒளிப்பதிவு ஒரு ஹாலிவுட் பட நேர்த்தியோடு அமைந்துள்ளது.
கதைதான் பழசு என்றால் திரைக்கதை மிகவும் சுமார்! எந்தக் கேரக்டர் மீதும் நமக்குப் பிடிமானம் வரவில்லை. ரைட்டிங்காக மிகவும் வீக்கான படமாக இருப்பதால், மேக்கிங்கில் இருக்கும் மாயாஜாலம் நம்மை ஈர்க்கத் தவறுகிறது.
2.5/5