பந்தா காட்டும் பத்தா டீசர்

Get real time updates directly on you device, subscribe now.

 

ஒருவாரமாக இணையத்தில் விஜய்சேதுபதியை விஜய் ரசிகர்கள் வச்சி செய்யும் நிலையில் பந்தாவாக வந்துள்ளது பத்தா படத்தின் டீசர்!

விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் சாய் அபயங்கர் உள்ளிட்ட திறமையான கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. முதல் சிங்கிளைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.