அட! டி.ஆர் இசைக்க இளையராஜா பாடியுள்ளார்!

Get real time updates directly on you device, subscribe now.

 

ஒரு காலத்தில் இளையராஜா பாடல்கள் போலவே டி.ஆர் பாடல்களும் ஹிட்டடித்தது. அதுவொரு பொற்காலம். தற்போது டி.ஆர் இசையில் இளையராஜா பாடியுள்ளார். அதன் விபரம் கீழே…

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தை ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’  படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.

பன்முக வித்தகரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் ‘கன்னடத்து பைங்கிளி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.