தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் தடம் பதித்த டி ஆர்!

Get real time updates directly on you device, subscribe now.

தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்டுள்ளார். தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் இன்று வெளியிட்டார்.

இது குறித்து பேசிய அவர், “ஆங்கில புத்தாண்டு 2023 சமீபத்தில் பிறந்துள்ளது. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன்,” என்று கூறியுள்ளார். மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார்.