ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்புகள் குறையுது! : அடடே… இதுதான் காரணமா?
தமிழை விட தெலுங்கிலும், ஹிந்தியிலும் மட்டும் நடித்துச் சம்பாதித்தால் போதுமென்று அந்த இரு மொழிப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார் ஸ்ருதிஹாசன். அவ்வப்போது தமிழ்ப்படங்களில் தலை காட்டினாலும் தமிழில் நடித்த படங்கள் எதுவும் பெரிதாகப் போகாததால் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லை.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவருக்கு இப்போது அங்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக பாலிவுட்டை குறி வைத்து அவர் நடித்த ஹிந்திப்படங்கள் சரியாகப் போகாததால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்.
இடையில் தமிழில் தேடி வந்த ”சங்கமித்ரா” படத்திலிருந்தும் விலகி விட்டார். இதனால் ஒரு வெளிப்படம் கூட இல்லாமல் கைவசம் அப்பாவின் ”சபாஷ் நாயுடு” படத்தை மட்டுமே வைத்திருக்கிறார்.
எப்படி திடீரென்று ஸ்ருதிக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது என்று விசாரித்தால் அவருடைய வயதைக் காரணம் காட்டுகிறார்கள்.
பொதுவாகவே திரையுலகில் 30 வயதை எட்டிய நடிகைகளை ரசிகர்கள் ஓரங்கட்ட ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் 30 வயதை எட்டிய ஸ்ருதிஹாசனுக்கும் ரசிகர்களிடையே இருந்த மவுசு குறைந்து விட்டது.
அதனால் தான் அவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க யோசிக்கிறார்களாம் இயக்குநர்கள். எந்த மும்மொழிகளில் பிஸியாக இருந்தாரோ அந்த மும்மொழிகளும் கை விட்டு விட்டதால் இப்போது கவர்ச்சியாகவும் நடிக்கத் தயாரென்று மலையாளம், கன்னட மொழிப்படங்களில் வாய்ப்பு வேட்டையாட ஆரம்பித்திருக்கிறார்.