கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !

Get real time updates directly on you device, subscribe now.

சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவினில், அதர்வா நடிக்கும் “ட்ரிகர்” படத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்த இந்த விழாவினில் இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளார் சுருதி நல்லப்பா, நடிகர் அதர்வா முரளி ஆகியோர் படம் குறித்து மாணவிகளிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி ,தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர் அதர்வா பேசியதாவது..
இங்கு கல்லூரியில் உங்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகம் வருகிறது. மீண்டும் கல்லூரி செல்ல ஆசையாக இருக்கிறது. எங்கள் படத்தை உங்களிடம் கொண்டு வருவது மகிழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கும்படியாக ஒரு நல்ல படம் செய்துள்ளோம். 100 படத்திற்கு பிறகு மீண்டும் திரில்லர் என்ற போது யோசித்தேன் ஆனால் இந்தப்படத்தின் கதை மிக புதுமையாக இருந்தது. நான் வழக்கமான பாத்திரங்களிலிருந்து மாறுபட்டு நடித்திருக்கிறேன். இப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி.

Related Posts
1 of 7

பின்னர் கல்லூரி மாணவர்கள் சார்பில் அதர்வா மற்றும் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

#Trigger #ட்ரிகர்