‘ஜானி கட்டார்’ தமிழ் ரீமேக் : பிரசாந்த்துடன் ஜோடி சேர்கிறார் சஞ்சிதா ஷெட்டி

Get real time updates directly on you device, subscribe now.

sanjitha

ஜித், விஜய் சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் அவர்கள் கூடவே போட்டி ஹீரோவாக வளர்ந்து வந்தவர் நடிகர் பிரசாந்த்.

சொல்லப்போனால் இந்த இருவருக்கு முன்பே பிரசாந்த்துக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம் இருந்தார்கள். ஆனால் திடீரென சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில விரும்பத் தகாத நிகழ்வுகளால் வெளிக்கம்பெனிப் படங்களில் நடிப்பை அறவே விட்டு விட்டார்.

இதனால் சரிந்து போன மார்க்கெட்டை மீண்டும் கொண்டு வர அவருடைய் அப்பாவும், நடிகருமான தியாகராஜன் சொந்தமாக சில படங்களை தயாரித்தார்.

Related Posts
1 of 2

அதில் கடைசியாக வந்த சாகசம் படம் பிரசாந்த்தின் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் வலு சேர்ப்பதாக அமைந்தது.

இப்போது மீண்டும் ஒரு புதுப்படத்தில் தயாராகி வருகிறார் பிரசாந்த். ஹிந்தியில் சக்கைப் போடு போட்ட ‘ஜானி கட்டார்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார் நடிகர் தியாகராஜன்.

இதில் தான் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சஞ்சிதா ஷெட்டி ஓ.கே சொல்லியிருக்கிறாராம்.

‘நான்’, ‘எமன்’ போன்ற படங்களை இயக்கிய ஜீவாசங்கரின் உதவியாளர் வெற்றிச் செல்வன் இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.