உன்னோடு கா – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Unnodu-Ka-Review-1

RATING : 2.5/5

ரம்பரை பகையால் ரெண்டு பட்டு கிடக்கும் சொந்த ஊரை தங்களது வாரிசுகளை வைத்து ஒன்றிணைக்க முயற்சிக்கும் இரண்டு குடும்பங்களின் கதை தான் இந்த ‘உன்னோடு கா’.

ஐந்து தலைமுறைகளாக பகையை வளர்த்துக் கொண்டு கிராமத்தில் வசிக்கும் இரண்டு பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பிரபுவும், தென்னவனும் திக் ப்ரெண்ட்ஸ்.

இந்த ஊரில் இருந்தால் நம் நட்புக்கு இடைஞ்சல் தான் என்று கருதும் இருவரும் கிராமத்திலிருந்து எஸ்கேப் ஆகி சென்னைக்கு வந்து பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள்.

வளரும் தங்கள் வாரிசுகளான நாயகன் ஆரிக்கும், நாயகி மாயாவுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டால் கிராமத்து பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் வாரிசுகளோ எப்போது பார்த்தாலும் பூனையும் – எலியுமாக, கீரியும் – பாம்புமாக இருக்கிறார்கள்.

Related Posts
1 of 10

அந்த மோதல் மூடு மாறி காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா? பரம்பரை பகை தீர்ந்ததா? என்பதே கிளைமாக்ஸ்.

நாயகனான ஆரி! காமெடி கலந்த கேரக்டரில் பார்ப்பது ரசிகர்களுக்கு ரொம்பப் புதுசு. நாயகி மாயாவுடனான செல்லச் சண்டைகளாகட்டும், அவருடனான ரொமான்ஸ் காட்சிகளாகட்டும் ரொம்பவே நெருக்கம் காட்டியிருக்கிறார்.

நாயகியாக வரும் மாயா ஆள் தான் கொஞ்சம் குள்ளமே தவிர, கன்னத்தை கிள்ள வைக்கிற ‘சோ… க்யூட்’ அழகி தான். ஆரியுடன் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டைப் போடும் காட்சியில் சீரியஸ் என்றால், ‘நம்பிக்கை அதானே எல்லாம்’ என்று பிரபுவிடமே டயலாக் பேசுகிற இடத்தில் செம கலாய் காமெடி!

இன்னொரு காதல் ஜோடியாக வருகிறார்கள் பால சரவணன் – மிஷா கோஷல். மிஷா கோஷலின் அப்பா மன்சூர் அலிகான் என்றால் காமெடிக்கு கேட்க வேண்டுமா? இவர்களோடு பிரபு, ஊர்வசி, ஸ்ரீ ரஞ்சனி, சாமியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் என எல்லா கேரக்டரையும் காமெடி செய்ய வைத்து ரசிகர்களை ‘சிரிக்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க’ வாக்குகிறார்கள்.

சத்யாவின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை பரவாயில்லை. கிராமத்து மண்ணின் அழகியலையும், புழுதி கிளப்பும் பகைமையையு தனது கேமராவில் இயல்பு மாறாமல் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்.

கதையை எழுதியிருப்பவர் இப்படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன். ஆணவக் கொலைகளும், கெளரவக் கொலைகளும் அதிகரித்து விட்ட இந்த கால கட்டத்தில் சரியான படிப்பினையாக வந்திருக்கிறது இந்தப்படம். அதை சீரியஸாக சொல்லாமல் போகிற போக்கில் காமெடியாகச் சொன்ன அறிமுக இயக்குநர் ஆர்.கேவுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

உன்னோடு கா – காமெடி கலாட்டா!