வா வாத்தியார்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நலன் குமாரசாமியின் வித்தியாசமான காமெடி படங்களின் வரிசையில் வருகிறாரா இந்த வா வாத்தியார்?

நிழலில் வரும் எம்.ஜி.ஆரை தன் பேரன் ரூபத்தில் நிஜத்தில் உருவாக்க நினைக்கிறார் ராஜ்கிரண். ஆனால் பேரனான கார்த்தியோ அதற்கு முற்றும் மாறுபட்டுத் திரிகிறார். கொஞ்சமும் பொறுப்பற்று அலையும் கார்த்தி. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேறு. அவர் செய்யும் அட்ராசிட்டி பொறுக்க முடியவில்லை. திடீரென ஒரு கட்டத்தில் அவருக்குள் எம்.ஜி.ஆரின் ஆன்மா புகுந்து விடுகிறது. அதன்பின் நடக்கும் பேண்டஸி எக்ஸ்பீரியன்ஸ் தான் படம்

நடிகராக கார்த்தி சற்று பின்நோக்கிச் செல்லும் படமாக வா வாத்தியார் அமைந்துள்ளது. மிகச்சிறந்த நடிகரான கார்த்தி பல இடங்களில் ஓவர் நடிப்பால் அயர்ச்சியைத் தருகிறார். கீர்த்தி ஷெட்டி கேரக்டரும் பெரிதாக எழுதப்படவில்லை. ஷில்பா மஞ்சுநாத் கேரக்டரும் அப்படியே. ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த் ராஜ் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பால் கரையேறுகிறார்கள்

சந்தோஷ் நாராயணன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஓரளவு சிறப்பாகச் செய்துள்ளார். பழைய எம்.ஜி.ஆர் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாக ஜார்ச் ஏற்றவில்லை. காஸ்ட்யூம் டிசைனர் கார்த்திக்கிற்கு விதவிதமாக ட்ரஸ் கொடுத்துள்ளார்

எம்.ஜி ஆரை தொட்டாலே வெற்றி என்பது அரசியலுக்குத் தான் மூட் நம்பிக்கை என்றால் சினிமாவுக்குமா நலன்? இன்னும் நல்ல காத்திரமான திரைக்கதை அமைக்க வல்லமையுள்ள நலன்குமாரசாமி ஏன் இந்தப் படத்திற்கு இவ்ளோ வீக்காக ஸ்கிரீன்ப்ளே செய்தார் என்று தெரியவில்லை. இந்தப் பொங்கலுக்கு வந்த வாத்தியாரை வா வாத்தியாரே என்று மனதார சொல்ல முடியவில்லை
2/5