சர்தார்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கமர்சியல் கலந்திருந்தாலும் சமூகத்தின் மீது அதீத அக்கறை கொண்டு வரும் படங்கள் கவனிக்கப்படும். சர்தார் அந்த கேட்டகிரியில் வருகிறார்

போலீஸ் அதிகாரியாக மகன் கார்த்தி. ரா உளவாளியாக ஒரு காலத்தில் இருந்து தற்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியாத அப்பா கார்த்தி. அப்பாவின் மீது சுமத்தப்பட்ட பழி ஏன் எதற்கு என்ற கேள்வியை நோக்கி மகன் கார்த்தி செல்ல..தண்ணீரை மூலதனமாக கொண்டு மக்களை வேட்டையாட துடிக்கும் அதிகார மட்ட வில்லனை முடித்து வைக்க அப்பா கார்த்தி ரீ என்ட்ரி கொடுக்க..அடுத்தடுத்து நடப்பது என்ன என்பதே சர்தாரின் கதை

அப்பா மகன் என இரட்டை வேடத்தில் அசத்தியிருக்கிறார் கார்த்தி. போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக இருந்தாலும் விளம்பரத்தை விரும்பும் ஆளாக கலகலப்பூட்டுகிறார். ரா உளவாளியாக வரும் சீரியஸான அப்பா கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். படத்தில் காதல் காட்சிகள் வேண்டும் என்பதற்காகவே ராஷி கண்ணாவை வைத்திருக்கிறார்கள். லைலாவின் கேரக்டரும், அவரின் நடிப்பும் படத்தில் அற்பதமாக வெளிப்பட்டுள்ளது. சிறுவன் ரித்விக் நல்ல தேர்வு. வில்லன் லிப் சிங்க் மிஸ் ஆனாலும் கேரக்டருக்கு சரியாக சிங் ஆகியுள்ளார்.

படத்தின் மற்றொரு ஹீரோ ஜார்ஜ் வில்லியம்ஸ் எனலாம். ஒளிப்பதிவில் பின்னி பெடலெடுத்துள்ளார். எல்லா ப்ரேமிங்கும் நச் ரகம். ஆர்ட் டைரக்டர் வொர்க் நிச்சயமாக கொண்டாடத்தக்கது. மேலும் ஜீவி பிரகாஷ் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசை மட்டுமே ஆறுதல்.

மிக முக்கியமான விசயத்தை எடுத்துப் பேசிய விசயத்தில் இயக்குநர் மித்ரன் கவனிக்க வைத்தாலும், தேவையில்லாத இடங்களில் பாடல்கள், காதல் காட்சிகள் என படத்தின் வேகத்திற்கு தடைபோடும் விசயங்களை நிறையச் செய்துள்ளார். அப்பா கார்த்தியின் கேரக்டர் ப்ளீச்சிட்ட அளவிற்கு மகன் கார்த்தியின் கேரக்டர் கதையில் தாக்கம் ஏற்படுத்தாதது சின்ன நெருடல். இருப்பினும் நீர் அரசியலின் ஆழத்தை அலசியதில் சர்தார் முக்கியமானவராகி விடுகிறார்

இது சர்தார் தீபாவளி
3.25/5

#sardar #சர்தார்